நாங் கள் இடையர்கள்

வாடைக்கும், கோடைக்கும்,
குளிருக்கும் மழைக்கும்
இரவுக்கும் பகலுக்கும் நடுவில்தான்
எங்களின் வாழ்வியலின் களம்
அதுதான் எங்கள் சொர்க்கம்
ஏனென்றால் நாங்கள் இடையர்கள்.

வயலே பஞ்சுமெத்தை
வரப்பே தலையணை
என்று தொடரும் எங்கள்
கிடை வாழ்வில்
ஆடு மாடும்தான் எங்கள்
அம்மாவுக்கெல்லாம் அம்மா.
ஏனென்றால் நாங்கள் ஆயர்கள்

செத்தாட்டுக் உப்புக்கண்டமும்
வாழ்ந்தாட்டுப் பாலுந்தான்
இடையனுக்குச் சொந்தம் என்று வாழும்
எங்கள் கிடை வாழ்வில்
விண்மீன்களை வச்சு நேரம்பாத்து
பாராக்கட்டி கெடை காத்து
ஆகாயத்துக்கும்
தரைக்கும் நடுவில்
ஆடு மாட்டோடு கழியும்
எங்கள் வாழ்க்கையால்
யாருக்கும் தீங்கில்லை
இயற்கைக்கு எந்தச் சேதாரமும் இல்லை
ஏனென்றால் நாங்கள் கோவலர்கள்.

வானமலையும் பறவைக்கும்
நிலம் அலையும் இடையனுக்கும்
ஒரே ஒரு கூடுதான் வாழ்வு.
கோடையில் வயல் வெளியிலும்
கார்காலத்தில் மலங்காடுகளிலும்
பொழுதைக் கழிக்கும் எங்களுக்கு
வலசைப்பாதை ஒன்றுதான் வாழ்வு
மேய்ச்சல் ஒன்றுதான் உயிர்மூச்சு
ஏனென்றால் நாங்கள் இடையர்கள்.

We, the Idaiyar

We, The Idaiyar Between the forests and the plains,
Between the cold and the rain,
Between the night and the dawn.
Lies the theatre of our Clues.
We are the Idaiyar.

In this life of herding.
We belong to the warmth of sheep pens,
Where farms are our beds,
And soft tilled earth, our pillows.
Cradled by our mothers-
Our sheep, rams, and goats-
We are the Idaiyar.

Our flocks gift us milk and butter in life,
And salted meat in death.
The stars whisper when it is our turn
To watch the herd.
As we tread gently between
Our sky and land.
Leaving no scars on life around,
We moue with the ebb and flow of our flocks.

We are the Koualars.
For the bird that wanders the skies,
And the Idaiyar that wanders the land,
Life itself is but one nest
Among the many we find –
In summer farms And atop tall, rain-kissed hills.
The migratory path is our life,
And grazing. the breath that sustains it;
We are the Idaiyar.